சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்த சகோதரி!!

0
131
Sister who killed her two brothers for property!!
Sister who killed her two brothers for property!!

ஆந்திர மாநிலம்: கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி இருக்கும் நிலையில் தனது மனைவி இறந்ததால் தனியாக வசித்து வந்திருக்கிறார். அவரும் கடந்த வருடம் இறந்து போனார்.  மகன்கள் இருவரும் அடுத்தடுத்து மாயமாகி உள்ளன இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வந்தது. அதில்  கிருஷ்ணவேணி சொத்துக்காக தனது இரு சகோதரர்களையும் கொலை செய்தது உறுதி ஆனது.

ஆசிரியராக பணியாற்றிய தனது தந்தையின் பணபலன்கள் வீடு மற்றும் குடும்ப சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வத்தில்  சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது உறவினர்களுடன் சேர்ந்து அண்ணன் தம்பியை தீர்த்த கட்ட கிருஷ்ணவேணி சதி திட்டம் தீட்டி உள்ளார். அதன் பின்பு நவம்பர் 26 ஆம் தேதி தனது தம்பிக்கு அளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். மதுபோதையில் இருந்த தம்பியை தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை போன்று கடந்த 10 ஆம் தேதி தனது அண்ணன்  கோபி கிருஷ்ணாவையும் குடிக்க வைத்து மது போதையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். அவர்களின் உடல்களை நகரிக்கல்லூவில் உள்ள கால்வாயில் வீசி உள்ளார். அதனை அடுத்து கிருஷ்ணவேணியை கைது செய்து அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்களைப் பிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளன.

அண்ணன் தம்பியை திட்டமிட்டு அவர்களின் சகோதரியை கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபாதி தொடரில் விலகி ஓய்வு பெறும் ரோஹித்?? ஹிட்மேன் செய்த செயல் ..அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
Next articleதிணறிய ஆஸ்திரேலியா பவுலர்கள்..காரணம் என்ன ?? ஃபாலோ ஆனை தவிர்த்த இந்திய அணி!!