டாய்லெட்டில் நீண்டநேரம் உட்கார்ந்து இவ்வளவு பெரிய ஆபத்தா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் டாய்லெட்டில் அதாவது கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்கள். அதுவும் வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தால் இன்னும் வசதியாக போய்விடும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுதுபவர்கள் கழிவறைக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வது ஒரு பழக்கமாக மாறிவிட்டது.
உலக அளவின் கணக்கெடுப்பில் 73 சதவீத மக்கள் கழிவறைக்கு செல்லும்போது செல்போன்களை எடுத்து செல்கின்றனர். 18 வயது முதல் 29 வயது வரை உள்ள மக்கள் 93சதவீத நேரத்தை செல்போனை பயன்படுத்துவதில் செலவிடுகிறார்கள்.
டாய்லெட்டில் அதாவது கழிவறையில் அதிக நேரம் செலவிடுவது கழிவறைக்கு சென்று பேப்பர் படிப்பது, கழிவறைக்கு சென்று செல்போனை பயன்படுத்துவது என்பது மிகவும் தவறான செயல். கழிவறையில் 10 நிமடங்களுக்கு மேல் இருப்பது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கழிவறையில் நீண்ட நேரம் செலவிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்:
* கழிவறையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் உங்களின் மலக்குடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தம் மலக்குடலின் வீக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இது மூலநோய்க்கு வழிவகுக்கும். இந்த மூலநோயை தடுக்க அதிக நேரம் கழிவறையில் அமர்ந்திருக்க கூடாது.
* கழிவறையில் நீண்டநேரம் அமர்ந்திருக்கும் போது உங்கள் சிறுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்படும். இது சிறுநீர் பாதை தொற்றுக்கு வழிவகுக்கும். இந்த தொற்றை சரிசெய்ய வேண்டுமென்றால் கழிவறையை பயன்படுத்துவதை 10 நிமிடம் அல்லது அதற்கும் குறைவாக பயன்படுத்த வேண்டும். மேலும் சிறுநீர் பாதை தொற்றுகளை சரிசெய்ய பாக்டீரியாக்களை நீக்க வேண்டும். இந்த பாக்டீரியாக்களை நீக்க அதிகம் தண்ணீர் குளிர்பானம் போன்ற திரவங்களை அருந்த வேண்டும். இதனால் அதிக அளவு சிறுநீர் போகும்போது அந்த பாக்டீரியாக்கள் வெளியேறி விடும்.
* கழிவறையில் அதிக நேரம் செலவிடுவது உங்களின் அன்றாட வாழ்க்கையில் எதோவொரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
* கழிவறையில் 10 நிமிடங்களுக்கும் மேல் நீங்கள் இருந்தால் அது எரிச்சல் கொண்ட குடல் நோய் கிரோன் நோய் போன்ற நோய்களின் அறிகுறிகளாக இருக்கும்.
மேலே உள்ள எல்லாம் நடக்காமல் இருக்க நீங்கள் கழிவறையை பத்து நிமிடங்களுக்கும் குறைவாக பயன்படுத்த வேண்டும். அது உங்களின் உடல்நல பிரச்சனைகளை தடுக்கவும் சீரான வாழ்க்கைக்கும் உதவும்