சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த டோலிவுட் படம்!! அடுத்த என்ன செய்வது என்ற விரக்தியில் நம்ம ஹீரோ!!
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் அந்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது இவரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் மாவீரன்.
இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அடுத்து ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள படம் தான் எஸ்.கே.21.
இப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை கதையை வைத்து எடுக்கப்பட இருக்கிறது. அதாவது, கேப்டன் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தான் படமாக எடுக்க இருக்கிறார்கள்.
இந்த படம் எடுப்பதற்கு எல்லாம் தயாராகி கொண்டிருக்கும் நிலையில், தற்போது திடீரென தெலுங்கு படம் ஒன்று இதே கதையில் வெளிவந்துள்ளது. இது எஸ்.கே.21 படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பாரா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. பெரும்பாலும் பார்த்த படங்களை மக்கள் திரும்பவும் பார்க்க நினைக்க மாட்டார்கள்.
எனவே, இவர் என்ன முடிவு செய்வார் என்று அனைவரும் யோசித்து வருகின்றனர். தெலுங்கில் இதே கேப்டன் முகுந்த் வைத்து எடுத்துள்ள இப்படம் சிவகர்த்திகேயனுக்கு வீழ்வை ஏற்படுத்தி விடுமா என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதற்கு சிவகார்த்திகேயன் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பது கூடிய விரைவில் தெரிய வரும். எனவே, இதற்கு பின்பு இப்படத்தின் கதையில் எதாவது மாற்றம் செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.