கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு!

கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு!

விஜய் டிவியில் சிவாங்கி சூப்பர் சிங்கரில் அறிமுகமானார்.அதில் அதிகளவு அவர் பிரபலமடையவில்லை.அதனையடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக வளம் வந்தார்.தற்பொழுது வரை மக்கள் மனதில் அவர்களின் சொந்த பிள்ளையாகவே அனைவரின் மனதையும் இடம் பிடித்தார்.அதில் செய்யும் சேட்டைகள் மற்றும் வெகுளிதனமே இவரது வெற்றிக்கு காரணம்.மேலும் குக் வித் கோமாளியில் புகழுடன் சேர்ந்து அண்ணன்,தங்கை என்று கூறி அன்பை பரிமாறிக்கொள்வது பார்பவர்களை ரசிக்க வைக்கிறது.

குக் வித் கோமாளி முடிந்தவுடன் அதிலுள்ள கோமாளிகள் அனைவரும் பெருமளவு பிரபலமடைந்தனர்.குக் வித் கோமாளி நடைபெற்ற போது ஓர் முறை செலிபிரிட்டியாக சிம்பு வந்திருந்தார்.அப்பொழுது அந்த தொகுப்பு பார்ப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஏனென்றால் அந்த தொகுப்பு முழுவதும் நகைச்சுவை நிரம்பி காணப்பட்டது.அதனையடுத்து குக் வித் கோமாளி புகழ்,பாலா,சிவாங்கி ஆகிய அனைவரும் திரையில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.அவர்களின் முதல் வெற்றி படியாக இதனை அனைவரும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

சிம்பு தற்சமையம் நடித்து வரும் எந்த படங்களும் அவர் எதிர்பார்த்த வகையில் வெற்றியடைவில்லை.அதுமட்டுமின்றி இவர் சமீபகாலமாக பல படங்களில் பாடல் பாடி வருகிறார்.அந்தவகையில் சிவாங்கி, சிம்புவுடன் இணைந்து பாடல் ஒன்றை தற்போது பாடியுள்ளார்.இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் மாயன்.இந்த படத்தை க்ரோ ஸ்டுடியோஸ் மற்றும் GVKM எலிபென்ட் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

இந்த படத்திற்கு M.S ஜோன்ஸ் ருபெர்ட் என்பவர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் கதாநாயகனாக வினோத் மோகன் நடித்துள்ளார்.கதாநாயகியாக பிந்து மாதவி நடித்திருக்கிறார்.இந்த படத்தில் மச்சி என்ற ஓர் பாடல் இடம்பெற்றுள்ளது.அந்த பாடலைதான் சிவாங்கி மற்றும் சிம்பு இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.அந்த பாடல் பற்றி குக் வித் கோமாளி சிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment