இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்!

0
66
These are half bonuses! Sudden announcement by the Central Government!
These are half bonuses! Sudden announcement by the Central Government!

இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்!

தமிழக அரசு மக்களுக்கு பல நத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் அளித்து வருகிறது.அவர்களுக்கு அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் முன்னேறி வருவதற்கு மட்டுமே.மேலும் பெண்களுக்கு அவர்கள் படிப்தற்கு உதவித்தொகை அளித்து வருகிறது.குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை கொடுக்கிறது.அதுமட்டுமின்றி பெண்கள் கல்யாணத்திற்கும் நகை,உதவித்தொகை கொடுத்து உதுவுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கான மகப்பேறுக்கும் இதுவரை உதவி செய்து வருகிறது.

அந்தவகையில் தமிழக அரசு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு ரூ.50000 ஊக்கத்தொகையை வழங்குகிறது.பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த உதவித்தொகையை வழங்குகின்றனர்.இந்த திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகள் பேரில் வைப்பு நிதியாக செலுத்துவது நாளடைவில் அவர்களின் பிள்ளைகள் படிப்பு மற்றும் திருமணத்திற்கு திரும்ப தரப்படும் என கூறியுள்ளனர்.அதனடிப்படையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பின் முதல் திட்டத்தின் கீழ் ,ஓர் பெண் குழந்தை இருந்தால் ரூ.50000 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என கூறியுள்ளனர்.அதுவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25000 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

பெற்றோர்கள் இந்த திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்த 5 வயது முதல் மாதம்தோறும் ரூ.150 அந்த குழந்தைகளுக்கு உதவித்தொகையாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த 5 வயதில் தொடங்கும் உதவித்தொகையானது 18 வயது வரை தமிழக அரசு வழங்கும் என கூறியுள்ளனர்.மாவட்ட அதிகாரி அல்லது குழந்தை நல அதிகாரி ஆகியோரை சந்தித்து இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்,

இந்த திட்டத்தை பயன்படுத்த இந்த கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் மட்டுமே உபயோகிக்க முடியும்.அது கீழ்க்கண்டவாறு:

இந்த திட்டத்தின் இணைய விரும்பும் பெண் குழந்தைகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் வருடத்திற்கு ரூ.72,000 குறைவாக இருக்க வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு 3 வயது முடிவதற்குள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதேபோல பெற்றோர் ஒருவர் 35 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு செய்திருப்பது அவசியம்.இத்திட்டத்தில் இணைய விரும்புவர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்க கூடாது.திட்டத்தில் இணைந்த பிறகு ஆண் குழந்தையை தத்தெடுக்கவும் கூடாது.