பாலிவுட்டிற்கு பாட்டமைக்க போகும் நம்ம அனிருத், அதுவும் இந்த படத்திற்கு!

0
162
Music director Anirudh

அனிருத் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்திற்காக முதன் முதலில் இசையம்மைத்தார்.

அனிருத் ரவிச்சந்தர் பழைய நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன் ஆவார். ரவி ராகவேந்திரா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

அவர் இசையமைத்த முதல் திரைப்படத்தின் அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. ‘Why this kolaveridi ‘ பாடல் உலகம் எங்கும் வைரல் ஆனது. யூடியூபில் 200 மில்லியன் வியூவுக்களை தாண்டியது.

குறுகிய காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றதற்காக YouTube சமீபத்தில் “மிகவும் பிரபலமான” தங்கப் பதக்கம் மற்றும் “ட்ரெண்டிங்” வெள்ளிப் பதக்கம் விருதுடன் வீடியோவை கௌரவித்தது. அதன் மிகப்பெரிய வெற்றி மற்றும் நாடு தழுவிய புகழைத் தொடர்ந்து, அந்த பாடலை பாடிய நடிகர் தனுஷை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் “கெளரவ விருந்தினராக” அழைத்தார்.

அதன் பிறகு அனிருத் AR முருகதாஸின் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்தார். அந்த படத்தில் வெளியான செல்பி புள்ள பாடலும் மிகப்பெரிய வைரல் ஹிட் அடித்தது. 019 ஆம் ஆண்டில் ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்படும் வரை இந்த படத்தின் ஒலிப்பதிவு அனிருத்தின் மிக பெரிய வெற்றியடைந்த ஆல்பமாக இருந்தது .

2016ல் , அனிருத் சோனி மியூசிக் உடன் ஒரு பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், சோனி நிறுவனம் அவரது சொந்த சுய ஆல்பங்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளை வெளியிடுகிறது.2017 ஆம் ஆண்டில், டைம்ஸ் ஆஃப் இந்தியா அவரை சென்னையில் மிகவும் விரும்பத்தக்க மனிதர் என்ற பட்டத்தை கொடுத்தது . 2018 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் பட்டத்தை வென்றார், தொடர்ச்சியாக இரண்டு முறை இந்த பட்டத்தை அடைந்த முதல் இசைக்கலைஞர் ஆனார்.

அனிருத் இசையமைக்கும் படங்களின் அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் ஆல்பமாகவே இருக்கிறது. இசை ஆல்பமாக வந்த ‘நம்ம சென்னை’ பாடல், ‘கடல் தாண்டி போகும் காதலி’ 2016 ஆம் ஆண்டு காதலர் தினத்திற்கு விக்னேஷ் சிவன் பாடல் எழுதி அனிருத் இசையமைத்த ‘அவளுக்கென’ பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

கோலிவுட்டில் வெற்றி வாகை சூடிய இசையமைப்பாளர் அனிருத் இப்போது பாலிவுட்டில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி தெலுங்கில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்த ஹிந்தி திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே ஜெர்ஸி திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

 

author avatar
Parthipan K