மாற்றுத்திறனாளி கழுத்தில் குத்திய பதினாறு வயது சிறுமி ?கரணம் என்ன?..
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறு வயதேயான சிறுமி ஒருவர் தனது தாயுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.ஒருவருக்கொருவர் தட்டு தடுமாறி இடம் கிடைக்கும் இடத்தில் புகுந்து சென்றனர்.
செய்வதென்று தெரியாமல் சில வாகன ஓட்டிகள் அங்கேயே வாகனத்தை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.சிறுமியோ இருசக்கர வாகனங்களின் பின்னல் சென்று கொண்டிருந்தார்.இதனை தொடர்ந்து சிறுமியின் முன்னாள் சென்ற நபர் அந்த சிறுமிக்கு வழிவிட மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறியது.கோபத்தின் உச்சத்தை அடைந்தார் அந்த சிறுமி.மேலும் தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
போலீசார் சிறுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் கொலை செய்த நபர் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.இச்செயலை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.