முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!!
மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவர்தனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் தெற்கு பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் கழிவரதன் அவர்கள். இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலிவரதன் அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசும்போது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக பேசி உள்ளார். இந்த இந்த தகவல் பரவலாக பரவி திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் மறைந்த ஒரு தலைவரை அவதூறாக பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை கைது செய்ய கோரிக்கைகள் எழுந்தன. இதை எடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருக்கோவிலூர் பகுதி அருகே உள்ள மனப்பூண்டி சென்று அங்கு அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவரை விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.