சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினை உரிக்க மிக எளிய வழி!! இல்லத்தரசிகளுக்கு ஸ்பெஷல் டிப்ஸ்!!
சமையல் செய்யும்போது நமக்கு சில விஷயங்கள் மிகவும் சிரமமாக இருக்கும். அந்த வகையில் பூண்டு உரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பூண்டு உரிப்பதற்கு நகம் இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலே அது மிகவும் சிரமமாக இருக்கும். அவ்வாறு நகம் இருந்தாலும், நகத்தின் மூலம் எடுப்பதால் கையில் அது வலியை ஏற்படுத்தும்.
ஆனால், இந்த முறையில் பூண்டு உரிக்க நகம் எதுவும் தேவையில்லை. அத்துடன் சின்ன வெங்காயம் தோலை உரிப்பதற்கும் சிரமப்பட வேண்டியிருக்கும். இனி பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் எதுவாக இருந்தாலும் நீங்கள் அதனுடைய தோலை உரிக்க சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.
பத்து நிமிடத்தில் தண்ணீரில் ஊறவைத்தால் போதும். ஒவ்வொன்றாக எடுத்து கத்தியை வைத்து அதன் தலைப் பகுதியை லேசாக நறுக்கினால் சுலபமாக உரித்து விடலாம். இதே முறையில்தான் சின்ன வெங்காயத்தையும் தோலுரிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் பூண்டு, வெங்காயம் கிலோ கிலோவாக கொடுத்தால் கூட பத்து நிமிடத்தில் எந்த வித சிரமமும் இல்லாமல் மொத்தமாக தோல் உரித்து விடலாம். இதன் மூலமாக பூண்டு உரிப்பது மட்டுமல்லாமல் சின்ன வெங்காயம் உரிக்கவும் மிகவும் எளிதாக இருக்கும். மேலும் இதற்கு நகமும் தேவை இல்லாத காரணத்தினால் நகத்தில் சிக்கிக் கொண்டு வலியை ஏற்படுத்தாத மிகவும் இயற்கையான ஒரு முறையாகும்.