தங்கம் விலையில் சிறு சறுக்கல்..! இன்று அதன் நிலவரம்!

0
525
#image_title

தங்கம் விலையில் சிறு சறுக்கல்..! இன்று அதன் நிலவரம்!

தை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது. போகின்ற போக்கை பார்த்தால் தங்கம் விலை ரூ.6000த்தை கடந்துவிடும் போல.. என்று எண்ணி நகைப்பிரியர்களும், சாமானியர்களும் கலக்கமடைந்து இருக்கின்றனர்.

தினமும் தங்கம் கிராமுக்கு ரூ.10, ரூ.15 ஆக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று இறக்கம் அடைந்து இருக்கிறது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,860க்கு விற்ற நிலையில் இன்று ரூ.10 குறைந்து ரூ.5,850க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,393க்கு விற்ற நிலையில் இன்று ரூ.11 குறைந்து ரூ.6,382க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.88 குறைந்து ரூ.51,056க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: விலைமாற்றம் இன்றி நேற்றைய விலைப்படி 1 கிராம் ரூ.78க்கும், 1000 கிராம் ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்து இருப்பது நகைப்பிரியர்கள் மற்றும் சாமானியர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக உள்ளது.

Previous articleதொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?
Next articleரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..!