“புன்னகை அரசி” ரம்யா பாண்டியன் பிறந்த நாள்! அவங்க வயசு என்ன தெரியுமா?

0
87

குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா பாண்டியன் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் இனிமையானவர், யார் மனதையும் புண்படுத்தாதவர், என்ற பெயரில் பல்வேறு இளைஞர்களின் மத்தியில் பெயரை பெற்றவர் ரம்யா பாண்டியன். மாடியில் இடுப்பு தெரிய அவர் எடுத்த போட்டோ ஷூட் தான் உலகமே அவரை திரும்பி பார்க்க வைத்தது. பிக்பாஸ் 4 சீசன் என்ற நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு பங்கேற்பாளராக ரம்யா பாண்டியன் உள் நுழைந்தார். பிக் பாஸ் இன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். மொத்த போட்டியாளர்களில் இந்த சீசனில் இவர் மட்டுமே ஃபைனல் வரை சென்றார்.

அவ்வப்போது பல போட்டோ ஷூட் களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் உலக யோகா தினமான அன்று கடற்கரையில் வெள்ளை உடையுடன் இறுக்கமான பேன்ட் சட்டைகளை அணிந்து யோகா போஸ் கொடுத்தவாறு போஸ்ட் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.எனினும் இப்பொழுது அவர் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு ராமே ராவனே என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இன்று அவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குக் வித் கோமாளி புகழ் ரம்யா பாண்டியனுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

author avatar
Kowsalya