கொரோனா பீதியில் மாஸ்க் அணிந்துகொண்டு நூதனமாக புகைபிடிக்கும் வாலிபர் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ!

0
145

கொரோனா நோய் பரவல் காரணமாக உலகமே பீதியில் ஆழ்ந்துள்ளது, இதனால் பல்வேறு நாடுகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலக நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 2 லட்சத்து ௭௭ ஆயிரத்தை கடந்துள்ளது, இதில் 11 ஆயிரத்து 474 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நோய் தொற்றில் இருந்து எவ்வாறெல்லாம் நம்மை தற்காத்து கொள்வது என்று உலக நாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதை பார்த்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்யும் கைவைத்தியங்கள் தான் இணையதளம் முழுவதும் காணக்கிடைக்கிறது.

அதில் சிலர் செய்யும் நூதன நடவடிக்கைகள் தான் இணையதள வாசிகளுக்கு பொழுது போக்கு. அது மாதிரி ஒரு வீடியோவில் ஆப்ரிக்க இளைஞர் ஒருவர் முகமூடி அணிந்து நூதனமாக புகைபிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் தனது முகமூடியில் ஓட்டை போட்டு புகைபிடிப்பது, கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது பின்னர் அந்த ஓட்டையை முடி போட்டு மறைகிறார். இந்த வைரல் விடியோவை பார்த்து அனைவரும் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

Previous articleடி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மோசடி ஓய்வுபெற்ற அதிகாரிகள் கைவரிசை
Next article10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?