உடல் பருமனை குறைக்கும் ஸ்மூத்தி! இதை எவ்வாறு செய்வது!!

Photo of author

By Sakthi

உடல் பருமனை குறைக்கும் ஸ்மூத்தி! இதை எவ்வாறு செய்வது
உடல் பருமைன குறைக்க உதவும் ஸ்மூத்தி வகை ஒன்றை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை இந்த ஸ்மூத்தியை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் உடல் பருமனை குறைக்க டயட் இருப்பவர்களாக  இருந்தால் இந்த ஸ்கூட்டர் உங்களுக்கு கட்டாயம் பயன்படும். இந்த ஸ்மூத்தியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
தேவையற்ற கொழுப்புச் சத்துக்கள் இதில் சேர்க்கப்படாததால் நாம் உடல் பருமன் ஏறாமல் கட்டுப்படுத்தலாம். இந்த ஸ்மூத்தியை காலையில் எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். இந்த ஸ்மூத்தியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு செய்வது என்பது பற்றியும் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் ஸ்மூத்தியை தயார் செய்யத் தேவையான பொருட்கள்…
* வாழைப்பழம் – 1
* பேரீச்சம்பழம் – 2
* வேர்கடலை – 3 ஸ்பூன்
* பால் – 100 மிலி
* தேன் – ஒரு ஸ்பூன்
* காபி தூள் – ஒரு சிட்டிகை
ஸ்மூத்தியை செய்யும் முறை…
முதலில் மிக்சி ஜான் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வாழைப்பழத்தை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். அதன் பின்னர் பேரீச்சம் பழம் கொட்டை இல்லாமல் இரண்டை சேர்த்து அரைத்து அதன் பின்னர் வேர்க்கடலை, காபித்தூள், தேன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இதில் பால் சேர்த்து அதனுடன் ஐஸ் கட்டிகளை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இதோ உடல் எடையை குறைக்கக் கூடிய ஸ்மூத்தி தயார். இதை ஒரு டம்ளரில் ஊற்றி அப்படியே குடிக்கலாம். இந்த ஸ்மூத்தியை தினமும் காலை அல்லது  இரவு குடித்து வந்தால் உடல் எடை குறையத் தொடங்கும்.