ரயில் பயணிகளுக்கு இவ்வளவு சலுகைகளா?? இது தெரிந்தால் இனி ரயில் பயணத்தை மட்டும்தான் செய்வீர்கள்!!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது.
அதன்படி தொலைதூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை முன்னதாகவே முன்பதிவு செய்து வைதிருகின்றனர்.இந்த நிலையில் தற்பொழுது ரயில் புறப்படுவதற்கு முன்பு வருகின்ற பயணிகள் அனைவரும் இரவு நேரங்களில் பயணிகளுக்கு என்றே அமைக்கப்பட்ட காத்திருப்பு அறையை பயன்படுத்தி கொள்ள முடியும்.
மேலும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கிளாக் ரூம் ,மருத்தவ வசதி மற்றும் தங்கும் வசதி போன்றவை பயணிகளுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் தொலைதூரம் பயணிக்கும் பயணிகளுக்கு தூங்கும் அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து ரயில்,பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.