உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!! 

0
33
The Chief Minister who wrote the highest price letter!! Central Government in silence!!
The Chief Minister who wrote the highest price letter!! Central Government in silence!!

உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!!

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு ஆலோசனை கூட்டத்தை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு ரேஷன் கடை மூலம் தக்காளியை கொடுத்து வருகிறது. இந்த உச்சக்கட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இது போன்ற விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவு பாதிக்கபட்டுள்ளார்கள். மேலும் மத்திய அரசு மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டேன் கோதுமை மற்றும் துவரப்பருப்பு தமிழகத்திற்கு தர வேண்டும். மேலும் மத்திய அரசின் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களை விடுவிடுப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவும்.

அதனையடுத்து உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உணவு பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டும். மேலும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் சில உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Jeevitha