இதில் இவ்வளவு நன்மைகளா!! கண்டிப்பாக அனைவரும் ட்ரை பண்ணுங்க!!
சப்போட்டா பழத்தை பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது. சப்போட்டா பழத்தை சுவைக்காக மட்டுமே அதிகமாக அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இதில் இருக்கக்கூடிய மருத்துவ பயன்கள் சிலருக்கு தெரிவதில்லை. எனவே சப்போட்டா பழம் சாப்பிடுவதனால் நமக்கு என்னென்ன சத்துக்கள் கிடைக்கும் என்னென்ன பாதிப்புகளை நமக்கு வரவிடாமல் தடுக்க முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சப்போட்டா பழத்தின் பயன்கள்:
1. சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. இதில் விட்டமின் சி இருப்பதினால் பாக்டீரியா தொற்றுகளை இது தடுக்கிறது.
3. இப்போது நிறைய பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். சப்போட்டாவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் இது மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்குகிறது.
4. சப்போட்டாவில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவு காணப்படுகிறது. இது உணவுக் குழாய் அலர்ஜி குடல் அலர்ஜி குடலில் எரிச்சல் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
5. சப்போட்டாவில் அதிக அளவு கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. இது எலும்புகள் நன்கு வலுப்பெறுவதற்கு உதவியாக இருக்கிறது.
6. மேலும் இதில் கால்சியம் மாங்கனிஸ் துத்தநாகம் போன்றவை இருப்பதனால் இது பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
7. சளி இருமல் இருப்பவர்கள் சப்போட்டா பழம் சாப்பிட்டு வர உடனடியாக குணமாகும்.
8. இது கண்களுக்கு மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணமாக்கும்.
9. சப்போட்டாவில் இருக்கக்கூடிய மெக்னீசியம் சத்தானது ரத்த ஓட்டத்தை சீராக இயக்குவதற்கு உதவுகிறது.
10. இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவுகிறது.
11. சப்போட்டாவில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதனால் ரத்தசோகை நோயையும் இது குணப்படுத்துகிறது.
12. உடல் சோர்வாக களைப்பாக காணப்படுபவர்கள் காலை உணவுக்கு பின்னர் சப்போட்டா பழத்தை அப்படியாகவோ அல்லது ஜூஸாக அரைத்தோ குடித்து வர உடல் மிகவும் ஆற்றலுடன் காணப்படும்.
13. மேலும் இதில் எலக்ட்ரோலைட் கார்போஹைட்ரேட் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் கர்ப்பிணிகள் இதை எடுத்துக் கொள்ள தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வராது.
14. இது நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதால் தலைமுடி பிரச்சனை சர்வம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று இதை ஒரே நாளில் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது அப்படி அதிகமாக சாப்பிட்டால் வாய்ப்புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.