வெண்பூசணி ஜூஸ் குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா!! நீங்களே குடித்து பாருங்கள்!!

0
64

வெண்பூசணி ஜூஸ் குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா!! நீங்களே குடித்து பாருங்கள்!!

சில நேரங்களில் சுவைக்காகவும் சில நேரங்களில் பசிக்காகவும் தினமும் உணவு சாப்பிட்டு வருகிறோம். ஆனால் எப்போதுமே நான் சாப்பிடக்கூடிய உணவில் மருத்துவ குணங்கள் இருக்கிறதா என்பதை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். எனவே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள விலை மலிவான உணவில் அதிகமாக யாரும் பயன்படுத்தாத வெண்பூசணியை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். இந்த வெண்பூசணியில் என்னென்ன பலன்கள் இருக்கிறது, இந்த ஜூஸ் குடிப்பதனால் உடம்பில் என்ன நிகழும், இந்த ஜூஸை எவ்வாறு தயாரிப்பது, எப்போதெல்லாம் குடித்தால் நன்மைகள், யாரெல்லாம் இதைக் குடிக்க கூடாது என்று பல தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

1. இந்த வெண்பூசணி கண்களுக்கு நல்லது.
இப்போது இருக்கும் காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் போனை பார்க்கின்றனர் இந்த மொபைல் போனினால் கண்களின் விழித்திரை பாதிக்கப்படுகிறது ஆனால் இந்த வெண்பூசணி ஜூஸை குடித்து வருவதால் விழித்திரை பாதிப்பில் இருந்து தடுக்க முடியும்.

2. ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்லது.
வெண்பூசணியின் விதைகளை இதனுடன் சேர்த்து ஜூஸாக செய்து குடிக்கும் போது நம்முடைய இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக இருக்கச் செய்யும்.

3. மூளையின் சுறுசுறுப்பிற்கு உதவும்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெண்பூசணி ஜூஸ் குடித்து வர மூளை சுறுசுறுப்பாக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதை மாணவர்களுக்கு தினமும் கொடுத்து வர படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

4. மன அழுத்தத்திற்கு நல்லது.
தினமும் நமக்கு வேலைப்பளுவினால் ஏராளமான மன அழுத்தம் பதற்றம் மனக்குழப்பம் படபடப்பு ஆகியவை தோன்றுகிறது இந்த வெண்பூசணி ஜூசை குடித்து வருவதால் இது நம் உடலில் இருக்கக்கூடிய சரோ டோனி உற்பத்தியை தூண்டுகிறது இதனால் மனக்குழப்பம் பதற்றம் முதலியவற்றிலிருந்து விடுபடலாம்.

5. உடல் சூட்டிற்கு நல்லது.
வெண்பூசணி ஜூஸ் ஆனது உடலில் இருக்கக்கூடிய சூட்டை முற்றிலுமாக குறைக்கும் சக்தி பெற்றது எனவே வெயில் காலங்களில் இந்த வெண்பூசணி ஜூஸ் குடித்து வர உடல் குளிர்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் சூட்ட அதிகமாக இருப்பதன் காரணமாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம் இந்த வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வர இந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

6. உடல் எடையை குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணி ஜூசை குடித்து வர உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். அதாவது வெண்பூசணியில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் இந்த நீர்ச்சத்து உடம்பில் இருக்கக்கூடிய நச்சு நீரை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும்.

7. சிறுநீரகத்துக்கு நல்லது.
நமது சிறுநீரக மண்டலத்தில் எரிச்சல், சூடு, புண்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் இவற்றையெல்லாம் சரி செய்யக்கூடிய சக்தி இந்த வெண்பூசணி ஜூஸ் இருக்கு உள்ளது. மேலும் சிறுநீரக கோளாறுகளை சரி செய்யவும் இந்த வெண்பூசணி ஜூஸ் குடிக்க வரலாம் மற்றும் இது சிறுநீரக கற்களையும் கரைக்க உதவும்.

8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இந்த வெண்பூசணி சாறை தினமும் குடித்து வர உடம்பில் ஏற்படக்கூடிய இருதய பிரச்சனை சிறுநீரக பிரச்சனை கேன்சர் சர்க்கரை நோய் முதலியவற்றை தீர்க்கக்கூடிய சக்தி இந்த வெண்பூசணி ஜூஸிற்கு உள்ளது.

9. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்லது. அதாவது வெண்பூசணியில் நீர் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இது நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் சரியாக செரிமானம் செய்யும் எனவே வெண்பூசணி ஜூஸ் குடித்து வர வயிறு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் நமக்கு ஏற்படாது. வயிறு புண் மற்றும் இரைப்பை குடல் தொற்று நோய்களையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த வெண்பூசணிக்கு உள்ளது.

10. மூல நோய்க்கு நல்லது.
மேலே கூறப்பட்டது போல் வெண்பூசணியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் மூலநோய் போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.

11. சர்க்கரை நோய்க்கு தீர்வு.
இந்த வெண்பூசணி ஜூஸை தினமும் நாம் குடித்து வர நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் சர்க்கரை நோய் படிப்படியாக குறையும்.

12. புற்று நோய்க்கு தீர்வு.
இந்த வெண்பூசணியானது உடம்பில் வளரக்கூடிய கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கக் கூடியதாக இருக்கிறது புற்றுநோய்க்கான கட்டிகளை தடுக்கவும் இது உதவுகிறது.

13. தடையற்ற ரத்த ஓட்டம்.
இதய நாளங்களை சரி செய்யக்கூடிய ஆற்றல் இந்த வெண்பூசணிக்கு உள்ளது அதுமட்டுமல்லாமல் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய வீக்கத்தை சரி செய்யவும் அடைப்புகளை சரி செய்யவும் இது பயன்படுகிறது.

எனவே தினமும் வெண்பூசணியை நாம் சாப்பிட்டு வர உடம்பில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் தீர்த்து ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை நிம்மதியாக வாழ வழிவகிக்கிறது.