இந்த ஐந்து பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! நூறு வயதானாலும் எந்த உடல் உபாதைகளும் நம்மளை நெருங்காது!

இந்த ஐந்து பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! நூறு வயதானாலும் எந்த உடல் உபாதைகளும் நம்மளை நெருங்காது!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் ,மூட்டு வலி இதய நோய் போன்றவைகள் ஏற்பட்டு வருகின்றது. ஆனால் 60 வயது ஆனாலும் 20 வயது போல் எந்த ஒரு பிரச்சனையும் உடலில் ஏற்படாமல் இருப்பதற்கு எந்த பொருட்களை நாம் சாப்பிடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

அதற்கு முதலில் நான்கு பாதாம் பருப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இந்த பாதாம் இதய நோய் வராமல் தடுக்க உதவும். இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மேலும் தினந்தோறும் 4 பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால் கரையும். அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு கசகசா சேர்த்துக் கொள்ள வேண்டும். கசகசா பயன்படுத்துவதனால் நம் உடலின் எலும்புகள் வலுபெறும்.

மூன்றாவதாக ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சி தன்மை கொண்டது. வெந்தயம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். நான்காவதாக ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கொண்டைக்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொண்டக்கடலையை நீரழிவு நோயாளிகள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

அதனையடுத்து உலர் திராட்சை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. ஒன்று முதல் எட்டு உலர் திராட்சைகள் எடுத்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இவ்வாறு இந்த ஐந்து பொருட்களையும் இரவு நாம் தூங்க செல்லும் முன்பு தண்ணீரில் ஊற வைத்து. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

 

Leave a Comment