சமூக பரவலானது ஒமைக்ரான்”- மரபனு ஆய்வகம் திடீர் அறிக்கை!

0
87

ஒமைக்ரான் தொற்று குறித்து, மரபனு பகுப்பாய்வு ஆய்வகம் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று சமூக பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான, தொற்றுகள் லேசான மற்றும் அறிகுறி அற்றதாக இருந்தாலும், தற்போது மருத்துவமனை அறையில் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சுறுத்தல் அதே நிலையில் தான் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டறியப்பட்ட B1.640.2 வகை பிரிவைப் பொறுத்தவரை அது கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை துரிதமாக பரவும் என்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் என்பதற்கும், எந்தவிதமான ஆதாரமும் இதுவரை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அது கவலைக்குரிய திரிபாக வகைப்படுத்த படவில்லை எனவும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் அந்த திரிபு கண்டறியப் படவில்லை எனவும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.