மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்லாததால் குடும்பத்தை கொன்று தானும் தற்கொலை செய்த இன்ஜினியர்!!
சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பணச்சிக்கல் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் அருகேயுள்ள ஹஸ்தினாபுரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்த மென்பொருள் இன்ஜினியர் பிரதீப் என்பவர், வீட்டின் கதவை அடைத்துக் கொண்டு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமை முழுவதும் கதவு திறக்காத காரணத்தால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது இன்ஜினியர் அவரது மனைவி சுவாதி மற்றும் அவரது குழந்தைகளான கல்யாண் கிருஷ்ணா, ஜெய கிருஷ்ணா ஆகிய நால்வரும் வீட்டின் அறையில் இறந்து கிடந்தனர்.
மேலும், இன்ஜினியர் பிரதீப் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியும் அவரது வீட்டில் பணச்சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

