கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

Photo of author

By Parthipan K

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் பாதிப்பு! அதிர்ச்சி தகவல்..!

Parthipan K

கொரோனா தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களை கண்காணிக்க தனி மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தொற்றிலிருந்து குணமாகி சென்ற 20% பேர் வேறு விதமான உடல்நலப் பிரச்னைகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது சிலருக்கு இதய பிரச்னை, நிமோனியா, ரத்தம் கட்டுதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எனவே, தொற்றிலிருந்து குணமாகிச் சென்றவர்களை கண்காணிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மையம் தொடங்கப்படும் என்றும், இதுபோன்று தமிழகம் முழுவதும் ஏற்படுத்த திட்டம் இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.