ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!!

Photo of author

By Divya

ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!!

Divya

Updated on:

ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!!

நம்மில் பலர் வீட்டு சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகளவில் இருக்கும். இதை சரி செய்ய நாம் கடையில் உள்ள இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கரப்பான் பூச்சி தொல்லைக்கு
குட் பாய் சொல்லிவிடலாம்.

கரப்பான் பூச்சி தொல்லை நீங்க எளிய வழிகள்:-

1) கற்பூரம்(சூடம்) மற்றும் ஊதுபத்தி ஸ்டிக்கை தண்ணீரில் போட்டு கரைத்துக் கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவை உடனடியாக வெளியேறி விடும்.

2) ஒரு பவுலில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி ஷாம்பு, 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அவை உடனடியாக வெளியேறி விடும்.

3) ஒரு பவுலில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். இதை 1/2 லிட்டர் சூடானநீரில் சேர்த்து கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விடவும்.

4)ஒரு துண்டு வெள்ளரிக்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஜூஸ் செய்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிக்கவும்.

5)1/4 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெயை ஊற்றி கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சமயலறையில் உள்ள சிங்க், மூலை முடுக்கில் தெளித்து விடவும்.

6)கிராம்பை தூள் செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அதன் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.