சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

0
176

சென்னை மயிலாப்பூரில் பிரம்மாண்டமான சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாதராண நாட்களிலேயே அதிக மக்கள் வலம் வருவர். அதுவும் வியாழக்கிழமையன்று சொல்லவே தேவை இல்லை. மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும்.

இதனை பயன்படுத்தி டிப் டாப் ஆசாமி ஒருவர் விலை உயர்ந்த செருப்பு திருடுவதை ஒரு வேளையாகவே வைத்திருந்தது ன்று சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர் செருப்பை வெளியே விட்டு விட்டு செல்லும் பகுதியில் அமர்ந்து கவனித்து கொண்டு இருந்துள்ளனர்.

ஒருவரையொருவர் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டும் பின்னர் எதையோ தேடுவதை போலவும் சுற்றி வந்துள்ளனர். பின்னர் என்ன நடந்தது என அவர்களுக்குள்ளேயே விசாரிக்கும் போது ஒருவருக்கொருவர் தங்களின் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை என பரப்பரமாக கூறிக்கொண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சற்று நேரத்தில் செருப்பை தொலைத்தவர்கள் எண்ணிக்கை 5-க்கும் மேல் உயர்ந்தது, பின்னர் யாரோ ஒருவர் தங்களது செருப்பை திட்டமிட்டு திருடுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், அனைவரும் கோயில் நிர்வாகத்திடம் சென்று தங்களது புகார்களை கூறினார்.

இதையடுத்து, கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஜாகிங் சென்றுவிட்டு அப்படிேயே பாதிவழியில் கோயிலுக்கு வருபவர் போல் டிப் டாப்பாக வரும் ஒரு ஆசாமி நேராக தனது பழைய செருப்பை கழற்றி விட்டு பதவிசாக காலைக் கழுவிக் கொண்டு, செருப்பு விடப்பட்ட இடத்திலேயே சிறிது நேரம் நின்று உடற்பயிற்சி செய்வது போல் நடித்து கொண்டிருந்தார்.

சீப்பே இல்லாமல் வெறுங்கையால் தலையை வாரிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு உள்ள புதிய செருப்பை பார்த்துக்கொண்டு தனது சொந்த செருப்பு போடுவதுபோல திருட்டு செருப்பை மாட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். இக்காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

காணாமல் போன ஒவ்வொரு செருப்பின் விலை 2000 ரூபாய்க்கு மேல் என செருப்பை தொலைத்தவர்கள் கூறியுள்ளனர். செருப்பை விட்டு சென்ற வெறும் 10 நிமிடத்தில் செருப்புகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என செருப்பை தொலைத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleகவினுடன் ஜோடி சேரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
Next articleரோஷிணி ஹரிப்ரியன் விலகுகிறாரா?. அடுத்த பாரதி கண்ணம்மா யார்?