மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்

0
162

மீண்டும் கேப்டனாக தாதா கங்குலி… அவர் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கங்குலி. அவர் 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய அணியை வழிநடத்தினார். அவர் கேப்டன்சியில் இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது இந்திய கிரிக்கெட்  வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் முன்னேறிய பொருளாதார வசதியோடு முன்னிலையில் உள்ளது பிசிசிஐ. பிசிசிஐ –ன் 39 ஆவது தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி. அதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து வரும் நிலையில் வரும் செப்டம்பரோடு அவர் பதவி முடிவடைவதாக சொல்லப்படுகிறது.

அவர் பதவி காலத்தில் பிசிசிஐக்கும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்து, கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த பிரச்சனைகளை கங்குலி சரியாக அனுகவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் கங்குலி தற்போது மீண்டும் கேப்டன் பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஆனால் அவர் அணியில் இடம்பெறப் போவது ஒய்வு பெற்ற வீரர்கள். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி இந்தியன் மகராஜாஸ் மற்றும் உலக ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த போட்டியில் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் இருக்கும் இந்தியன் மகாராஜாஸ் அணியை கங்குலி வழிநடத்துகிறார்.

இந்தியா மகாராஜாஸ் அணி:

சௌரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, பிரக்யான் ஓஜா, அசோக் டிண்டா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொஹிந்தர் சர்மா, ரிதீந்தர் சிங் சோதி.

உலக ஜெயிண்ட்ஸ் அணி:

லெண்டல் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மேட் பிரயர், நேதன் மெக்கல்லம், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மோர்டசா, அஸ்கர் ஆஃப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீல், கெவின் ஓ பிரயன், தினேஷ் ராம்டின்.

Previous articleமாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம்! ரத்து செய்யப்படுமா 11 ஆம் வகுப்பு பொது தேர்வு?
Next articleதமிழகத்தைச் சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சக விருது! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!