தமிழகத்தைச் சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சக விருது! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0
104

இந்தியா முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு வருடம் தோறும் உள்துறை அமைச்சக விருது வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த விதத்தில் 2021 ஆம் வருடத்திற்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ,உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் 2022 ஆம் வருடம் நாடு முழுவதும் சிறந்த புலன்விசாரணைக்கான விருது சிறப்பாக செயல்பட்ட 151 காவலர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதில் 15 சிபிஐ அதிகாரிகள், 11 மகாராஷ்டிரா காவல் துறையினர், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச காவலர்கள் 10 பேர், ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களின் காவலர்கள் 8 பேர், மாற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காவலர்கள் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதோடு இதில் 28 மகளிர் காவலர்களும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே தமிழ்நாடு காவல்துறை சார்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேருக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகவேஸ்வரி, ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வராஜன், உள்ளிட்டோர் மத்திய உள்துறையின் சிறந்த புலன் விசாரணைக்கான மத்திய உள்த்துறை அமைச்சகத்தின் விருதை பெறவிருக்கிறார்கள்.