தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல முன்பதிவு தொடக்கம்!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல முன்பதிவு தொடக்கம்!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீ ட்டை விட்டு வெளியே வராத நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு வருவதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.அப்போது அதிகளவு மக்கள் பயணம் செய்வதினால் ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்தது.அதனால் பெரும்பாலனா மக்கள் ரயில் பயணத்தையே விரும்பினார்கள் அதனால் தெற்கு ரயில்வே அனைத்து இடங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்க முடிவு செய்தனர்.

அதனையடுத்து கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவாண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளன்று தமிழ் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாடும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் 5 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி உள்ளது. தாம்பரம்-நெல்லை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி-தாம்பரம், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்குகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment