தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்!

0
118

தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்!

பயங்கர இருமல் உள்ளது. தொண்டை அறுவது போல் உள்ளது. தொண்டை வலி அதிகமாக உள்ளது. இதற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூடான நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொப்பளிக்கவும். அந்த சூடான நீரும் மஞ்சள் தூளும் உப்பும் அந்த தொண்டையில் நன்றாக படுமாறு கொப்பளிக்கவும். அவ்வப்போது சூடான நீரை அருந்தவும். மேலும் ஆவி பிடிக்கலாம். சுடுநீரில் துளசி ,வேப்பிலை, கிடைத்தால் ஆடாதொடை இலையையும் சேர்க்கலாம். மூன்று இலைகளையும் கொதிக்கின்ற நீரில் போட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவி பிடித்து வர முழுவதுமாக சரியாகும். பிரச்சனைக்கும் சரியான அருமருந்து. மேலும் இருமல் வரும்போது சாதாரண தண்ணீரை விட சுடு தண்ணீர் குடிப்பது அதிக பலனை தரும். பொட்டுக்கடலை, 10மிளகு அல்லது அரிசி, 10 மிளகு  வாயில் போட்டு நன்றாக மென்று முழுங்க வேண்டும் இதன் மூலம் தொண்டையில் உள்ள அழற்சி சரியாகும். மேலும் தொண்டை கட்டும் சரியாகும்.இதற்கு மேலும் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.