தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து!
கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் தெற்கு ரயில்வே சார்ப்பில் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.
மேலும் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பாரமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு செல்லும் அதிவிரைவு ரயில்கள் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து கோவைக்கு பகல் 2.30 மணிக்கு செல்லும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.
அதனை தொடர்ந்து மைசூரில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் காலை 5 மணிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து தினந்தோறும் மாலை 3.30 மணிக்கு பெங்களூர் செல்லும் அதிவிரைவு ரயில் ஆகியவை இன்று மற்றும் 21 ஆம் தேதிகளில் புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.