தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!
தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் “தெற்கு ரயில்வேக்குள் இயக்கப்படும் விரைவு ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயில்களின் சேவைகளின் நேரம் மாற்றபடவுள்ளது. மேலும் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களின் வேகமும் மாற்றப்படவுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் சென்னை முதல் கோவை வரையிலும், சென்னை முதல் நெல்லை வரையிலும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் உள்பட 11 விரைவு ரயில்கள் புதிதாக இடம்பெற்று உள்ளது.
மேலும் இன்று(அக்டோபர்1) முதல் 34 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று(அக்டோபர்1) முதல் 34 விரைவு ரயில்கள் சாதாரணமாக இயக்கப்படும் வேகத்தை விட 5 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் வரை அதிக வேகத்தில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி கோவை முதல் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(12244), விழுப்புரம் முதல் திருப்பதி வரை இயக்கப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ்(16854), சென்னை சென்ட்ரல் முதல் நாகர்கோவில் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்(12689), தாதர் முதல் நெல்லை வரை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ்(11021), பாலக்காடு முதல் திருச்செந்தூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில்(16731), மதுரை முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயில்(16344), கோவை முதல் மதுரை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16721), ஈரோடு முதல் நெல்லை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16845), குருவாயூர் முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16341), கெல்லாம் முதல் சென்னை வரை இயக்கப்படும் எழும்பூர் எக்ஸ்பிரஸ்(16824), சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16053) உள்பட 34 ரயில்களின் வேகம் 5 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை இன்று(அக்டோபர்1) முதல் அதிகரிக்கப்படும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.