பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!!

0
29
#image_title

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!!

நேற்று(செப்டம்பர்30) நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. தற்பொழுது உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று(செப்டம்பர் 30) ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியுடன் மோதியது.

தொடர்ந்து மழை பெய்ததால் காலதாமதாக டாஸ் போடப்பட்டது. இதெல்லாம் வென்ற ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் மழை காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டி 23 ஓவர்கள் குறைக்கப்பட்டது.

இதையடுத்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவென் ஸ்மித் அரைசதம் அடித்து 55 ரன்கள் சேர்த்தார். கேமரூன் கிரீன் 34 ரன்களும், அலெக்ஸ் கேரி 28 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 24 ரன்களும் சேர்த்தனர். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடி, வன் டெர் மெர்வ், வன் பீக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 8
6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது 14வது ஓவரின் பொழுது மழை பெய்யத் தொடங்கிய நிலையில் ஆட்டம் தடைபட்டது. மேலும் மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. மழை பெய்ததால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய போட்டி ரத்தானது.

இந்த போட்டியில் மூன்று ஓவர்களை வீசிய மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். அதாவது போட்டியின் முதல் ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரின் 5வது பந்தில் நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ் ஓடோவ்ட் அவர்களின் விக்கெட்டை எல்.பி.டபள்யூ முறையில் கைப்பற்றினார்.

அதே போல முதல் ஓவரின் 6 வது பந்தில் நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் பர்ரேசி அவர்களின் விக்கெட்டை போல்ட் முறையில் கைப்பற்றினார். பின்னர் போட்டியின் இரண்டாவது ஓவரை மிட்செல் மார்ஷ் வீசினார். பின்னர் மீண்டும் போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் பாஸ் டி லீட் அவருடைய விக்கெட்டை போல்ட் முறையில் கைப்பற்றினார்.

இதன் மூலமாக பேட்டியின் முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்திலும் மூன்றாவது ஓவரின் முதல் பந்திலும் தொடர்ச்சியாக விக்கெட் எடுத்ததன் மூலமாக மிட்செல் ஸ்டார்க் அவர்கள் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.