ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.அந்த தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.அதில் கல்வி நிறுவனங்கள்,அரசு கட்டிடங்கள்,ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.மேலும் இந்த சட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்.இதில் சென்னையில் 242 பேருந்துகளும் மதுரை மற்றும் கோவையில் தலா 100 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
மேலும் சென்னை,மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகள் பாரமரிப்பு பணி நடைபெற்று வருகின்றது.அதனால் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் முழுமையான பேருந்துகள் இயக்க முடியாத நிலை உள்ளது. சென்னையில் மட்டும் 37.4 சதவீத பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் தயார் செய்யப்படவுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்துகளில் 40 சதவீதம் பேருந்துகள் மட்டுமே தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்படும்.மீதமுள்ள 60 சதவீத பேருந்துகள் சாதாரண பேருந்துகளாகவே கொள்முதல் செய்யப்படும்.அப்போது நீதிபதிகள் கூறுகையில் தாழ்தள பேருந்துகள் என்பது மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் என கூறுவது தவறு.60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் ஏறுவது மிக கடினம் அதனால் கொள்முதல் செய்யக்கூடிய பேருந்துகளில் நூறு சதவீத பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் மாற்றி அமைக்க கூடாது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருப்பதினால் நூறு சதவீத பேருந்துகளும் தாழ்தள பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாது என கூறினார்.அதனை தொடர்ந்து நீதிபதிகள் எந்த மாதிரியான தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.