மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தமிழ் நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை, இலவச ஸ்கூட்டர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநில அரசுகளும் அவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் ஜூலை 28 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த முகாமில் அவர்களில் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த மாற்றுத்திறனாளி குறை கேட்பு முகம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த முகாம் ஜூலை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்கள். மேலும் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அந்த முகாவில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், மருத்துவ சான்றிதழ் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய அட்டைகளை எடுத்து வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் அவைகளை நெறியில் கொண்டு வந்து கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.