பத்திரப்பதிவில் மகளிருக்கு சிறப்பு சலுகை!! அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!
பத்திரப்பதிவு என்பது ஒரு நிலத்திற்கு மட்டும் ஒரு வீட்டிற்கு பத்திரப்பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்.இந்த பத்திரப்பதிவின் மூலம் தான் இது யாருடைய சொத்து என்பது தெரிய வரும்.
இந்த பத்திரப்பதிவு இருந்தால் மட்டுமே சொத்து ஆக்கரிமுப்புகளை கட்டு படுத்த முடியும்.மேலும் நாட்டில் சொத்து பிரச்சனை பலவற்றை இந்த பத்திரத்தை வைத்துதான் சரி செய்ய முடியும்.மேலும் நாம் பத்திரப்பதிவை சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் செய்ய முடியும்.
இவ்வாரு பத்திரப்பதிவு மகளிர் பெயரில் செய்யும் பொழு பல சலுகைகள் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.
அந்த வகையில் இனி பத்திரப்பதிவு செய்யும் மகளிருக்கு இன் முத்திரை தீர்வு,பதிவு கட்டணம் போன்றவற்றில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசு உத்தரவு படி பொதுவாக வீட்டு மனை வாங்கும் பொழுது 7 சதவீதம் முத்திரை தீர்வு அதோனோடு 2 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் முத்திரை தீர்வு மற்றும் கட்டண தொகையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் அரசு மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்வோர்களுக்கு முத்திரை தீர்வு மற்றும் கட்டண தொகையை குறைத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அத்தனை குறைக்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களில் இந்த சலுகை வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து தமிழகத்திலும் இந்த சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.