திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!

Photo of author

By Parthipan K

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!

Parthipan K

Special screening in theaters! Only allowed for one week!

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!

தீபாவளி கோலாகலமாக துவங்கி உள்ளது.மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் மேலும் தீபாவளி அன்று பெரிய நடிகர்கள்  உடைய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும்.இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளிவரும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.

இந்த படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது.சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

இதனால் இவர்கள் நடித்துள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.மேலும் இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு தமிழ் நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.