இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு! 

Photo of author

By Parthipan K

இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு! 

Parthipan K

Special train to these places starts today! Order issued by Southern Railway!

இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாட முடியாத நிலை உருவானது.ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட தொடங்கினார்கள்.கடந்த மாதம் தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட்டது.இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வந்துள்ளது.

வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்பதினால் பயணிகளின் வசதிக்கேற்ப மற்றும் அதிகளவு கூட்ட நெரிசலை தடுப்பதற்கும் சேலம்,ஈரோடு,திருப்பூர்,கோவை வழியாக மைசூர்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..

அந்தவகையில் மைசூர்-கொச்சுவேலி வண்டி என் 06211 சிறப்பு ரயில் இன்று மற்றும் வரும் 25 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் மைசூருவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும்.மேலும் இது மாண்டியா, கெங்கேரி,பெங்களூரு,பெங்களூரு கண்டோன்மெண்ட், ஓசூர்,தர்மபுரி,வழியாக அடுத்த நாள் காலை 7.53 மணிக்கு சேலம் வந்தடையும்.

அதனையடுத்து சேலத்தில் இருந்து 7.55 மணிக்கு புறப்படும்.ஈரோடு,திருப்பூர்,கோவை,பாலக்காடு,திருச்சூர்,அலுவா,எர்ணாகுளம்,திருவல்லா,செங்கனூர், கொல்லம் வழியாக இரவு 7.20 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமார்க்கமாக கொச்சுவேலி-மைசூர் வண்டி எண் 06212 சிறப்பு ரயில் நாளை மற்றும் வரும் 26 ஆம் தேதி திங்கள்கிழமை கொச்சுவேலியில் இருந்து இரவு பத்து மணிக்கு புறப்படும்.

கோவை,திருப்பூர்,ஈரோடு வழியாக அடுத்த நாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும்.அதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து புறப்படும் ரயில்  இரவு 7.15 மணிக்கு மைசூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது சீனாவில் அதிகளவு கொரோனா தொற்று பாதிப்படைந்து வருகின்றது.இந்தியாவிலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது.