இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்!

0
179
Special trains for this festival! Travelers excited!
Special trains for this festival! Travelers excited!

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்!

தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் செல்ல துவங்கியுள்ளனர்.காரைக்கால்-எர்ணாகுளம்  டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ,சென்னை -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ,சென்னை-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ,ஹைதராபாத்-திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளுட்ட தினசரி ரயில்கள் ,ஹிம்சாகர்-அகல்யநகரி ,கன்னியாகுமரி,ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

மேலும் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 250ஐ கடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் கொரோனா பரவல் காரணமாக  கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் அனைத்து கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தது.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் அணைத்து இடங்களும் இயல்பு நிலைக்கு மாற தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகை கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனால் வெளியூரில் இருப்பவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு வருகின்றனர். ரயில்கள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆகியிருகின்றது. அதனால் ஒரு வாரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

Previous articleகாரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..
Next articleஅரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!