இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

0
294
Special trains starting today! Southern Railway announced!
Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்து.அதனால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.இந்நிலையில் நாளை குடியரசு தின விழா கொண்டாபடவுள்ளது.அதனால் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அந்தவகையில் தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

அதனை தொடர்ந்து ஜனவரி 29 ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மேலும் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.இந்த ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல்,மதுரை,விருதுநகர்,சாத்தூர்,கோவில்பட்டி,திருநெல்வேலி,வள்ளியூர்,புதுக்கோட்டை,வழியாக செல்லும் என அறிவித்துள்ளது.

Previous articleமீண்டும் போதை பொருட்கள் அமல்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தள்ளுபடி!
Next articleதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!