உங்கள் பெயரின் முதலெழுத்து ‘A’-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இதை கவனமா படியுங்க!

Photo of author

By Savitha

உங்கள் பெயரின் முதலெழுத்து ‘A’-ல் ஆரம்பிக்கிறதா? அப்போ இதை கவனமா படியுங்க!

Savitha

Updated on:

யாருடைய பெயர் ‘A’ என்ற எழுத்தில் தொடங்குகிறதோ, அவர்களின் வாழ்க்கையில் சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கம் இருக்கும்.

‘A’ என்பது ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் முதலெழுத்து ஆகும், இது எண் 1 என்ற நிலையை குறிக்கிறது. எண் கணிதத்தின்படி, எண் 1 என்பது சூரியனால் ஆளப்படுகிறது மற்றும் இந்த எழுத்து ஜோதிடத்தின்படி கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ளது. அதனால் ‘A’ எழுத்து சூரியனின் ஆற்றலுடன் முதன்மையாக செவ்வாய் கிரகத்தின் செல்வாக்குடன் உள்ளது.

யாருடைய பெயர் ‘A’ என்ற எழுத்தில் தொடங்குகிறதோ, அவர்களின் வாழ்க்கையில் சூரியன் மற்றும் செவ்வாயின் தாக்கம் இருக்கும். ‘A’ எழுத்தில் பெயர் கொண்டவர்கள் புத்திசாலித்தனம், நம்பகத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் கலவையாக இருப்பார்கள். அவர்களுக்கு சூரியக் கடவுளின் அருளும், ஆசீர்வாதங்களும் பரிபூரணமாக கிடைக்கும்.

அதிக உணர்திறன் கொண்டவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள், அவர்கள் மிகவும் தைரியசாலியாகவும் இருப்பார்கள். மறுபுறம் ‘A’ எழுத்தில் பெயர் கொண்டவர்கள் அகங்காரமாகவும், மேலாதிக்கமாகவும், பிடிவாதமாகவும் இருப்பர்கள், திடீரென்று கோபப்படுவார்கள் ஆனால் அது நொடிப்பொழுதில் காணாமல் போய்விடும்.

இவர்களுக்கு தங்கள் துணையிடம் பெரிதாக காதலை வெளிப்படுத்த தெரியாது, சில சமயம் அவர்களது துணைக்கு இவர் தன் மீது உண்மையாகவே அன்பு வைத்திருக்கிறாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

சில சமயங்களில் அவர்களின் நேரடியான அணுகுமுறை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ‘A’ எழுத்தில் பெயர் கொண்டவர்கள் உறவு சம்மந்தமான விஷயங்களில் வெளிப்படையாக இருக்கவேண்டும். சோம்பல், ஈகோ மற்றும் பெருமை ஆகியவை உங்கள் மிகப்பெரிய எதிரிகள் என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.