மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

0
302
#image_title

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

மார்கழி மாத சிறப்புகள்…

தமிழ் மாதங்களில் மார்கழி இறைவனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மார்கழி மாதத்தை தனூர் மாதம் என்றும் அழைப்பார்கள். குரு திசை மார்கழி மாதத்தில் தான் முடிவடையும்.

மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சிவபெருமானை பசு நெய் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வர கண்டம் நீங்கி ஆயுள் கூடும்.

முழு நிலவு அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்து வர ஆரோக்கியம் மேம்படும்.

நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு…

நினைத்த காரியங்கள் நிறைவேற மார்கழி மாதமா 30 நாட்களும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வாசலில் கண்கவரும் கோலமிட்டு இறைவனை வழிபட விரைவில் பலன் அளிக்கும்.

அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று தண்ணீர் ஊற்றி வந்தால் மிகவும் சிறப்பு. வீட்டருகில் பிள்ளையார் கோயில் இல்லை என்றால் வீட்டில் சின்ன பிள்ளையார் வைத்து தண்ணீர் ஊற்றி வழிபடலாம்.

மார்கழி மாதத்தில் கோலமிட்டு அதன் மேல் சாணம் வைத்து பூசணி பூ வைப்பார்கள். இப்படி செய்வது இந்திரனை மகிழ்விப்பது என்று சொல்லப்படுகிறது. இதன் நற்பலனாய் வீட்டில் செல்வம் சேரும், நாட்பட்ட தடைகள் விலகும்.

சாணத்திற்கு பதிலாக மஞ்சள் பிடித்து வைத்து குங்குமம் வைத்து மஞ்சள் பூசணி பூ வைக்கலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்ய இம்மாதம் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

Previous articleவயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!
Next articleபாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!