நடுவானில் உயிருக்காக தத்தளித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!! இந்தியாவில் தரையிறங்கிய விமானம்!!

0
136
Sri Lankan cricketers staggered for their lives in the middle !! Plane lands in India !!
Sri Lankan cricketers staggered for their lives in the middle !! Plane lands in India !!

நடுவானில் உயிருக்காக தத்தளித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!! இந்தியாவில் தரையிறங்கிய விமானம்!!

இங்கிலாந்து  தொடரை முடித்து விட்டு இலங்கை வீரர்கள் தாய்நாடு திரும்பிய போது விமானத்தில் எதிர்பாரத விதமாக எரிபொருள் தீர்ந்து. விரைவில் இந்தியாவில் விமானத்தை தரையிறக்கப்பட்டன. இது குறித்து பயிர்ச்சியாளர் டாக் ஸ்போர்ட்டில் மிக்கி ஆர்தர் கூறுகையில், விமானத்தில் சற்றும் எதிர்பாராமல் எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை விரைவாக இந்தியாவில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என கூறினார். மேலும் விமானம் இந்தியாவில் தரை இறங்கிய போது அவரின் செல்போன்னை ஆன் செய்த பின்பு தான் இங்கிலாந்து ஆபரேஷன்ஸ் மேனேஜர் வெய்ன் பெண்ட்லி அவருக்கு மெசேஜ் அனுப்பியதை கவனித்துள்ளார். மேலும் அவர் தான் சூழ்நிலையை தெரியப்படுத்தி உள்ளார். இதனால் இலங்கை வீரர்கள் பதற்றத்தில்  இருந்துள்ளனர்.

மேலும் இங்கிலாந்தில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்றுப் பரவியதால் இலங்கை வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதன் முடிவுகளுக்காகவும் இலங்கை வீரர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த சிக்கலான நிலையில் இந்தியாவுடனான தொடர் தொடங்க உள்ளதால் இலங்கை அணி சிறிது பதற்றத்தில் இருகிறது. இங்கிலாந்தில் டி 20, ஒரு நாள் தொடரை இழந்து நாடு திரும்பி உள்ளது இலங்கை அணி. தற்போது இந்தியாவின் இளம் அணியுடன் இலங்கை டி 20 மற்றும் ஒரு நாள் போட்டியைத் தொடர்கிறது. மேலும் இந்த தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக உள்ளார். ராகுல் திராவிட் பயிற்சியாளராக வழிநடத்தி வருகிறார்.

Previous articleஇந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!
Next articleஉங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!