தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

0
279
#image_title

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: 3 மீனவர்கள் படுகாயம்!

கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பலர் கண்டம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. 

காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேர் நேற்று கடலுக்கு சென்றனர். இன்று கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த 11 மீனவர்களில் 7 பேரை கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். மேலும் 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியதுடன் மீனவர்களை கடலில் தள்ளி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இலங்கை கடற்படையினரின் இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Previous articleதன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 
Next article‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலகிய மணிமேகலை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!