திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில்!! பரபரப்பு சம்பவம்!!
புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான மக்கள் சாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர்.
மேலும், இக்கோவிலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால் எப்போதுமே கோவிலில் கூட்ட நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிழக்கு வாசல் ராஜ கோபுரத்தில் உள்ள நிலைகளில் சிறிதளவு விரிசல் ஏற்பட்டு இருந்தது. எனவே, இது இடிந்து விழாமல் இருப்பதற்காக பலகைகளையும் கம்புகளையும் வைத்து முட்டுக் கொடுத்து வந்தனர்.
இதன் மேற்புற பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடும் என்ற பயத்தோடு மக்கள் அனைவரும் பயத்துடன் அப்பகுதியை கடந்து சென்றனர்.
மேலும், இதன் அருகில் கிழக்கு ரங்கா மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராஜன் நடுநிலைப்பள்ளி மற்றும் சரீரங்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது பயந்தே இதை கடந்து சென்று கொண்டிருந்தனர்.
கோபுரத்தின் பகுதியை இடிந்து விழுந்து ஆபத்து ஏற்படுவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கூறி வந்தனர்.
எனவே, இதை சரி செய்ய ரூபாய் 67 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு திடீரென கிழக்கு கோபுரத்தில் பழுதடைந்து காணப்பட்ட அந்த பகுதி இடிந்து விழுந்தது.
இதனை அறிந்த கோவில் நிர்வாகம் தற்போது அந்த பகுதியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.