மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

Photo of author

By Vinoth

மணிரத்னத்தின் ‘பிளானிங்’கைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட ராஜமௌலி… ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ரிலீஸாக உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்னம். இதன் முதல் பாகம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ’பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளின் போது இயக்குனர் ராஜமௌலியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது “இரண்டு பாகங்களையும் இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டு 150 நாட்களுக்குள் படமாக்கி முடித்துவிட்டார்” எனக் கூறினேன். அதைக் கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டு “எப்படி திட்டமிட்டு இவ்வளவு குறைவான நாட்களுக்குள் முடித்தார்” எனக் கேட்டார்’ என்று கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்பட்டு கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டாலும் திட்டமிட்டு குறைவான நாட்களில் படமாக்கப்பட்டது. தமிழ்நாடு, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய பகுதிகளில் அதிகளவு ஷூட்டிங் நடந்துள்ளது.

இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.