காமராஜர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து! ஆர் எஸ் பாரதி மீது பாய்ந்த காங்கிரஸ் உடைகிறதா கூட்டணி?

0
77

முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டை மீறி திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மனுதர்மத்தில் இருப்பதாக தெரிவித்து ஈவேரா எழுதியுள்ளதாக சொல்லி, ஒரு கருத்தை இந்து மக்களுக்கு எதிராக தெரிவித்தார். இதனை கண்டிக்கும் விதமாக பாஜகவை சார்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்து வரும் ஆர். எஸ். பாரதி காமராஜரை பற்றி ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, நம்மை அழிக்க நினைத்தவர்கள் என்னவானார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். காமராஜர் திமுக காரனின் கட்டை விரலை வெட்டுவேன் என்று தெரிவித்தார். ஆனால் அவருக்கு கல்லறை கட்டியது நாம் தான் என்று பேசியுள்ளார்.

இதனை கண்டிக்கும் விதமாக திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் காமராஜரை இழிவுபடுத்திய அநாகரீகமான பொய்யான பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்பெல்லாம் இந்துக்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்த திமுகவினர் ஒரு காலத்தில் எதிர்க்கட்சியினரை தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்து வந்தார்கள். அதற்கு சென்ற சட்டசபை தேர்தலே சாட்சி அந்த தேர்தலின் போது நடைபெற்ற பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை இழிவுபடுத்தும் விதமாக ஆ ராசா பேசினார்.

இது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இது மட்டுமல்லாமல் அவர் இதற்கு முன்பாக பலமுறை இது போன்ற சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்து சிக்கிக் கொண்டுள்ளார்.

ஆனால் தற்போது தன்னுடைய கூட்டணி கட்சியை சார்ந்தவர்களையே திமுக சீண்டி பார்த்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி பெரும் அதிருப்தியிலிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி எப்போது முடிவுக்கு வரும் என்று பாஜக காத்திருக்கிறது. அதற்கேற்றவாறு தற்போது காமராஜர் தொடர்பாக திமுகவைச் சார்ந்த ஆர் எஸ் பாரதி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தேசிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினால் நிச்சயமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உடையும் என்று சொல்லப்படுகிறது. அப்படி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உடைந்தால் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு பாஜக தயாராகவுள்ளது.