இன்று காலை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் !

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்தது.

இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் மூலம் தெரிந்து கொள்ளலாம் மேலும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை,மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண்களில் குறைப்பாடுகள் ஏதேனும் இருப்பினும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் புகார் மனுவை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.