நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீ ஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது! 

0
401
#image_title

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது!  

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கை கோள்களை சுமந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.வி-டி2′  ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானில் இருந்து நாளை  சிறிய வகை செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும்  எஸ்.எஸ்.எல்.வி-டி2′ என்ற ராக்கெட் நாளை காலை 9:18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது மூன்று செயற்கை கோள்களுடன் ஏவப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி-டி2′ ராக்கெட்  தனது 15 நிமிட பயணத்தில் மூன்று செயற்கைக்கோள்களையும் 450 கிலோமீட்டர் வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த போவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரோவை சேர்ந்த  ‘இ.ஓ.எஸ்-07’ செயற்கைக்கோள், அமெரிக்காவைச் சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனத்தின் ‘ஜேனஸ்-1’ செயற்கைக்கோள், சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனத்தின் ‘ஆஸாதிசாட்-2’ ஆகிய 3 செயற்கைக்கோள்கள் இந்த எஸ்.எஸ்.எல்.வி-டி2’ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதில் ‘ஆஸாதிசாட்-2’ என்பது 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகள் இணைந்து உருவாக்கிய 8.7 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும்.  இது வெப்பநிலையை ஆராய அனுப்பப்படுகிறது. மேலும் இது டிஎஸ்பி இசையமைத்து பாடிய என்சிசி பாடலை இசைத்தபடி ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இஒஎஸ்-07 ( EOS-07) முதன்மை செயற்கைக் கோளாக உள்ளது. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள் 156.3 கிலோ எடையுள்ளது. அதேபோல் ஜேனஸ்-1 ஸ்மார்ட் செயற்கைக்கோள் பணியை உள்ளடக்கியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே ஏவப்பட்ட ‘எஸ்.எஸ்.எல்.வி-டி1’ ராக்கெட், அதன் இரண்டாம் கட்ட நிலையில் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு ‘எஸ்.எஸ்.எல்.வி-டி2’ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
Next articleOPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here