OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

0
238
#image_title

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள் 

அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கதிகலங்கி இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக ஓபிஎஸ் அணியில் இருந்த லியாகத் அலிகான் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு பேரிடியாக உள்ளது. இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கைப்பற்றியதால் ஓபிஎஸ் தரப்பிற்கு சிக்கல் அதிகமானது.

இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதும் பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. பொதுக்குழுவிலும் ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லை. ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்த போது இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற செய்வோம் என்று கூறியிருந்தனர்.

இதற்காகவாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்களை அழைப்பார்கள் என்று ஓபிஎஸ் தரப்பினர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இபிஎஸ் தரப்பினர் மட்டுமின்றி பாஜகவும் கூட ஓபிஎஸ் தரப்பினரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அவர்கள் அச்சத்திலும் அதிருப்தியிலும் உள்ளனர்.

சட்ட ரீதியாக போராடுவது மட்டுமே ஓபிஎஸ்க்கு இப்போது இருக்கும் ஒரே வழி. எனினும் களத்திலும், வியூகங்கள் வகுப்பதிலும் இபிஎஸ் வெற்றி பெற்று விடுகிறார். பொதுக்குழுவும் இபிஎஸ்க்கு சாதகமாக தான் உள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் பல்டி அடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், ஓபிஎஸ் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான கா.லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு தன்னுடைய ஆதரவு தெரிவித்தார். 

இதை பற்றி லியாகத் அலிகான் கூறுகையில், 2017 வரை எம்ஜிஆர் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தேன். அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தேன். சமீபகாலமாக பாஜகவின் சித்து விளையாட்டுகளில் சிக்கி ஓபிஎஸ் கட்சியை அடமானம் வைத்து விட்டார். பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதோடு, இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.

தினம் தினம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வரும் ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகியதாக தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதி வழங்கினால் கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தில் ஓபிஎஸ் அணி இருப்பதாகவும், ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானால் இபிஎஸ் அணிக்கு தாவி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

author avatar
Parthipan K