ரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

0
476
#image_title

ரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

சிம்புவின் படம் வெளியாகும் அதே நாளில் பிரபல நடிகர் ஒருவரின் படமும் வெளியிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் டி.ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன். அதன்பின்னர் இவர் பல ஹிட் படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்தார். கடந்த வருடம் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இது தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தலை என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னட படமான மஃப்டி என்பதன் ரீமேக் படமே பத்து தலை. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும்  பிரியா பவானி சங்கர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய இடத்தில் நடித்த விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதற்கான ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழ்நிலையில் இந்தப் படமும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடப்படுவதால் பத்துதல படத்தின் வசூல் பாதிப்படையலாம் எனக் கூறப்படுகிறது.