பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!
பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத SSC MTS(Multitasking Staff) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் என்று தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுத மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹிந்தி, ஆங்கிலம், தவிர அசமி பெங்காலி தமிழ் மலையாளம் கன்னடம், மராத்தி, உருது, ஒடியா பஞ்சாபி, மணிபுரி, கொங்கணி உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களது சொந்த மொழியில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
ஏற்கனவே மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில் தற்போது பணியாளர் தேர்வாணையத்தின் பணி தேர்வையும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.