பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு!

0
181
#image_title

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்-உச்சநீதிமன்றம் கெடு! 

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற தீர்ப்பை 3 மாதத்துக்குள் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

54 துறைகளில் 2003, மார்ச் 10-ஆம் தேதிக்கு முந்தைய பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடுவது சிரமம் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் 56 துறைகளில் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகள் என ஏராளமானோர் உள்ளனர். சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடுவது சிரமம் என வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

பதவி உயர்வுக்கான சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும் என்ற தீர்ப்பை 3 மாதத்துக்குள் தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்து, தலைமைச் செயலரை ஆஜராக உத்தரவிட வேண்டி வரும். விசாரணையை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கிறோம்.

author avatar
Savitha